பிரான்சின் பாராளுமன்றத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் அனைத்து உணவகங்களுக்கும் மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கும் ‘சிறப்பு வைரஸ் பாஸ்’ மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசிகளை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அரசின் இந்த இரண்டு நடவடிக்கைகளும் மக்களிடையே கடும் எதிர்ப்புக்களையும் அரசியல் பதட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது அரசாங்கமும் தொற்றுநோய்கள் மீண்டும் வருவதால் பாதிக்கப்படக்கூடிய மக்களையும் மருத்துவமனைகளையும் பாதுகாக்கவும், புதிய லாக்டவுன்களை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை தேவை என்று கூறுகிறார்கள்.
சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் செப்டம்பர் 15க்குள் தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டும் அல்லது அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. மேலும் எல்லா உணவகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் வேறு சில பொது இடங்களுக்குள் நுழைய “ஹெல்த் பாஸ்” தேவைப்படுகிறது.
இந்த பாஸ் பெற, மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட பெருந்தொற்று நெகடிவ் சான்றிதழ் அல்லது டிஜிட்டல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.