பிரான்சில் பல்வேறு சர்ச்சையான நுட்பத்தில் பறவைகளை வேட்டையாடுவதற்கு பிரான்ஸ் தடை விதித்து அறிவித்துள்ளது.
பிரான்சின் பாரம்பரியமிக்க பறவைகளை வேட்டையாடும் செயல்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜூன் மாதத்தில் இதே போன்ற ஒரு வகையிலான பசை மற்றும் பொறி பயன்படுத்தி பறவைகளை வேட்டைகயாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது தடைசெய்யப்பட்ட நுட்ப வகைகளில் பிரான்சின் தென்மேற்குப் பகுதி மற்றும் கிழக்கில் உள்ள ஆர்டென்னெஸ் போன்ற இடங்களில் வலைகள் அல்லது பறவை கூண்டுகள் கொண்டு வேட்டையாடும் முறை ஆககியவையும் அடக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தை பொருத்தமட்டில் பறவைகளின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக குறைந்து வருவதை அறிந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் விதித்த இந்த தடை உத்தரவை பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
பிரான்சில் மட்டும் ஆண்டுதோறும் 1,50,000 பறவைகள் பல்வேறு வேட்டை நுட்பங்களால் இறந்து போவதாக தெரிவித்துள்ளனர்.
சில பிரான்சின் வேட்டைக்காரர்கள் நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.