கடந்த ஜூலை 21ம் தேதி முதல் பிரான்சில் சினிமாக்கள், தியேட்டர்கள் மற்றும் பொது நீச்சல் குளங்கள் போன்ற பல கலாச்சார மற்றும் ஓய்வு இடங்களை பார்வையிட ‘ஹெல்த் பாஸ்’ அவசியம் தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சான்றிதழ்கள் கொண்ட சில பார்வையாளர்கள் குறிப்பிட்ட மருத்துவர்கள் அல்லது மருந்தாளுநர்கள் மூலம் பிரெஞ்சு பதிப்பைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த பாஸ் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் நீண்ட தூர போக்குவரத்து போன்ற பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்படும் பிரான்ஸ் காகித சான்றிதழ்கள் மற்றும் TousAntiCovid பயன்பாடு QR குறியீடு மூலம் எளிதாக ஸ்கேன் செய்து மக்கள் பயன்பெறலாம்.
மேலும் பிரான்சால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட எதிர்மறை பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜென் கோவிட் பரிசோதனையுடன் சுற்றுலாப் பயணிகள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வரலாம்.