TamilSaaga

14 ஆண்டுகள் ஓயாத உழைப்பு.. சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டில் ஊழியரின் சொந்த ஊருக்கே வந்த முதலாளி.. கண்ணீர் மல்க வரவேற்ற ஊழியர்.. வியந்து பார்த்த கிராம மக்கள்

சிங்கப்பூர் செல்லும் ஒவ்வொரு நபருக்கும் அவரது தலைவிதி என்பது அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியைப் பொறுத்துதான். நல்ல முதலாளி அமைந்தால், அவரது வாழ்க்கை சீக்கிரம் முன்னேறும். அதுவே, மோசமான ஓனர் அமைந்தால், வாழ்க்கையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இருக்காது.

சில முதலாளிகள் யார் எப்படி போனால் எனக்கென்ன மோடிலேயே இருப்பார்கள். அவர்களும் வளர மாட்டார்கள். அவரிடம் வேலைப்பார்க்கும் தொழிலாளியும் வளர முடியாது. ஆனால், தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் முதலாளி கிடைப்பது அபூர்வம்.

அப்படியொரு முதலாளி இங்கே மோசஸ் எனும் ஊழியருக்கு வாய்த்துள்ளது. ஆம்! தமிழ் சாகாவின் “Exclusive” பக்கத்துக்கு அவர் அளித்த பேட்டி இது. இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக…

“வணக்கம் தமிழ் சாகா. எனது பெயர் மோசஸ். சிங்கப்பூரில் 2008-ல் வேலைக்கு போனேன். 14 வருடங்கள் ஓடிப்போச்சு. எனக்கு 2 பிள்ளைங்க இருக்காங்க. ஊரு பாபநாசம். சரியா படிக்காததால், சாதாரண வேலைக்கு தான் சிங்கப்பூர் போனேன். ஆனால், என்னோட முதலாளி ரொம்ப நல்ல டைப். என்னோட நிலைமையை புரிஞ்சிகிட்டு ஆதரவா இருந்தாரு. சிங்கப்பூர் போன புதுசுல, எனக்கு எப்படி பணத்தை ஊருக்கு அனுப்பனும்-னு கூட தெரியாது. அந்த அளவுக்கு ஒன்னும் தெரியாமல் இருந்தேன்.

இப்போ கூட மொபைல் பயன்படுத்துறதுல அவ்ளோ அறிவு கிடையாது. பேசுறது, வாட்ஸ் அப் பாக்குறது மட்டும் தான் தெரியும். ஆனா, வேலையில ரொம்ப சின்சியரா இருந்தேன். அதனால் என் மீது முதலாளிக்கு எப்போதும் ஒரு மரியாதை இருந்துச்சு. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையைத் தவிர எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு நானே செய்வேன். ஒரு நிமிஷம் கூட உட்கார மாட்டேன்.

ஆபீஸ் வேலையில் இருந்து பாத்ரூம் க்ளீன் பண்ற வேலை வரைக்கும் செஞ்சிருக்கேன். அதுக்கு ஏற்ற மாதிரி சம்பளமும் எனக்கு உயர்ந்துக்கிட்டே வந்துச்சு. ஒருகட்டத்துல நான் இல்லனா, கம்பெனியில எந்த வேலையும் சரியான ஓடாது என்ற அளவுக்கு பெயர் எடுத்தேன். அதனால், என் முதலாளி என்னை வேற எங்கேயும் வேலை மாற விடல. அவரே எல்லாத்தையும் பார்த்துக்கிட்டார்.

மேலும் படிக்க – EXCLUSIVE: தீபாவளியை முன்னிட்டு… ஆன்லைனை விட மிக மிகக் குறைந்த விலையில் IndiGo விமான டிக்கெட் – ரூ.10,000 வரை உங்க பர்ஸில் சேமிக்கலாம்

இந்த சூழல்ல தான் ககொஞ்சம் கொஞ்சம் பணம் சேமிச்சு, கடந்த மே மாசம் ஊருல சொந்தமா ஒரு வீடு கட்டினேன். ஒரு சின்ன மாடி வீடு தான் அது. வீடு கிரகப்பிரவேசத்துக்காக கம்பெனியில லீவு கேட்டிருந்தேன். ’10 நாள் மட்டும் தான் லீவு.. சீக்கிரம் திரும்ப வந்துடனும்’-னு முதலாளி சொல்லி அனுப்பினார். நானும் சரின்னுட்டு ஊருக்கு வந்து மற்ற வேலைகளை பார்த்துட்டு இருந்தேன்.

கிரகப்பிரவேசம் நாளன்னைக்கு விடியற்காலையிலேயே சமையல் வேலை தொடங்கி ஆளுங்க சமைச்சிக்கிட்டு இருந்தாங்க. காலை சாப்பாடு, மதியம் சாப்பாடு என இரண்டு வேலைக்கும் சாப்பாடு ரெடியாகிட்டு இருந்துச்சு. மற்ற வேலைகள் எல்லாம் நடந்துகிட்டு இருந்தபோது, ஒரு கார் ஒன்னு வந்து வீட்டு வாசல்ல நின்னுச்சு. யாருன்னு நாங்க எல்லோரும் பார்த்துட்டு இருக்கும் போதே, என் முதலாளில் சிரிச்சிகிட்டே கீழ இறங்கினார். இன்னும் என்னால அந்த சம்பவத்தை மறக்க முடியல.

நான் உட்பட யாருமே அதை எதிர்பார்க்கல. நான் விக்கிச்சு போய் நின்னுட்டேன். ஒரு நிமிஷம் ‘நாம கனவு காண்றோமோ’-னு கூட யோசிச்சேன். இல்ல.. எல்லாமே உண்மை. எனக்காக சிங்கப்பூருல இருந்து என் முதலாளி என் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் என்னைப்பார்த்து, ‘என்ன மோசஸ்.. சவுக்கியமா?-னு கேட்டது’…. இதைவிட வேற என்னங்க வேண்டும். என் உழைப்பு கிடைச்ச மரியாதையா இதை பார்க்கிறேன்.

என்னை அறியாம கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் கொட்டுச்சு. பிறகு நிமைமையை புரிஞ்சிகிட்டு அவரை வரவேற்றேன் அன்னைக்கு சாய்ந்திரம் வரை என் கூடவே இருந்தது என்னால மறக்கவே முடியல. அவரை பார்க்குறதுக்காகவே கூட்டம் குவிஞ்சிடுச்சு. கடைசியா போறப்போ.. ’10 நாள் தா லீவு.. சீக்கிரம் வந்து சேரு மோசஸ்’-னு சொன்னப்போ மீண்டும் கண்ணீர் வந்துடுச்சு.

இந்த சம்பவத்துக்கு அப்புறம் என் பிள்ளைங்க என்னை ஒரு ஹீரோவா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. என் மனைவி கூட என்னை பார்த்து பெருமைப்பட்டா. மனசார உழைச்சா நிச்சயம் அதுக்கான அங்கீகாரம் உண்டுங்க. அதுக்கு நானே சாட்சி” என்று முடித்தார் பெருமிதத்துடன்.

நாமும் ‘வாழ்த்துக்கள் சார்’ என்று முடித்துக் கொண்டோம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts