நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் நாங்க வேற மாதிரி என்னும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று இரவு வெளியாகி அஜித் ரசிகர்களை வெறித்தனத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘வலிமை’ படத்தின் முதல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை நேற்று இரவு 7 மணியளவில் அதிகாரபூர்வமாக வெளியிட்டது படக்குழு. அதாவது இரவு 10:45 மணியளவில் ‘நாங்க வேற மாறி’ என்ற பாடல் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. பல மாதங்களாக ‘வலிமை’ அப்டேட் இல்லாத ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை அளித்தது.
சரியாக 3 நிமிடம் தாமதமாக அஜித்தின் நாங்க வேற மாதிரி பாடல் யூடியூப்பில் வெளியானது.
நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, காத்திகேயா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
கிட்டத்தட்ட 700 நாள்கள் இப்படம் குறித்த மேலதிக தகவல்களுக்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். அதனால் அவ்வப்போது பொறுமை இழந்து சமூக வலைத்தளங்களில் சிலவற்றைப் பதிவிட்டனர்.இந்நிலையில் கடந்த மாதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
அதனைத்தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. #Valimai, #NaangaVeraMadhiri, #Ajith, #HVinoth, #Yuvan உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம் பெற்று சாதனை புரிந்து வருகிறது.இந்த பாடல் யூடியூப்பில் இதுவரை 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.