பெரும்பாலும் சாக்லேட் பாய் முத்திரையை பெற்றுவிட்டாலே சினிமாவில் நிலைத்து நிற்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். அவர்களை ஆக்ஷன் ஹீரோக்களாக ஏற்றுக்கொள்ள கொஞ்சம் காலம் எடுத்துவிடும். ஆனால் அந்த அடையாளத்தை போக்கி முத்திரை படைத்த ஹீரோக்கள் ஏராளம்..
நடிகர் அஜித், சூர்யா, பிரசாந்த், ஆர்யா என பலரையும் குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால் அபினவ் போன்ற சில நடிகர்களுக்கு அந்த நடக்காமல் போனது தான் கொடுமை.
90ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தனுஷி நண்பராக நடித்திருந்தவர் தான் ஸ்மார்ட் லுக் ஆன்சம் பாய் அபினவ் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்த உள்ளார், ஆனால், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் இவர் பல்வேறு விளம்பரங்களில் கூட நடித்தார். அதே போல தொடர்ந்து அமெரிக்க மாப்பிளை, இரண்டாம் ஹீரோ என்று தான் இவருக்கு வாப்புகள் கிடைத்தது. இறுதியாக சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்து இருந்தார். பார்க்க பணக்கார வீட்டு பையன் தோற்றத்தில் இருந்த அவரை அனைவருக்கும் பிடித்து விட்டது.
இப்படி ஒரு நிலையில் பேட்டி இவரின் சமீபத்திய யூடியூப் பேட்டி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “எப்போதும் நான் அமெரிக்க மாப்பிள்ளையாக தான் இருக்கிறேன்.அம்மா இறந்த பின்னர் வறுமை, எல்லாத்தையும் வித்துட்டேன். அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டேன். அதுனால் தான் இப்படி உடல் எடை கொறஞ்சடுச்சிட்டேன்.
யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. லாக்டவுனில் அம்மா உணவகம் தான் எனக்கு சோறு போட்டது. வீட்டையும் இடித்து தள்ளிவிட்டார்கள். எதோ உயிரோட வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்ற சந்தோஷத்தில் நாள் சென்று கொண்டிருக்கிறது.
துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் எட்டு படங்களில் என்னை புக் செய்தார்கள். ஆனால், நான் ஹீரோவாக நடித்த படம் ஓடவில்லை என்பதால் அந்த மீதி படங்கள் ஓடாமல் போய்விட்டது” என உருக்காமக பேசியுள்ளார்.
சினிமா போன்ற கோடிக்கணக்கான பணம் புழங்கும் இடங்களில் ஒருவன் ஜெயித்தால் அவன் ராஜா அதுவே தோற்றால் அவன் காலத்திற்கும் மீள முடியாது.