பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன். 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
தற்போது நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்ய கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவருக்கும் தொலைக்காட்சி நடிகை கன்னிகாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்தனர்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் நடந்த இத்திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.
திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சினேகன் – கன்னிகா தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானவர் கன்னிகா ரவி. அடுத்து இவர் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை என படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் மீண்டும் இவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரும்பி கல்யாணவீடு என்ற சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.
இப்படி கன்னிகா பின்புலமும் சினிமா வாழ்க்கை நிறைந்திருக்க கல்யாணம் முடிந்த கையோடு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். சினேகன் டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் அரசியல், கலை, பயணம், உலக செய்திகள் என முழுமையான அனுபவங்கள் பார்வையாளர்களுக்கு நிறைந்திருக்கும் என்கிறார்.
இந்த லாக்டவுனில் யூடியூப் சேனல் தொடங்காத பிரபலங்களே இல்லை எனலாம். சீரியல் பிரபலங்கள் அனைவரும் யூடியூப் பக்கம் வந்து விட்டனர். இன்னும் கொஞ்சம் காலத்தில் சினிமா பிரபலங்களும் தொடங்கி விடுவார்கள். நல்ல வருமானம் கிடைக்கும் இடம் என்பதால் போட்டியும் அதிகமாகவே இருக்கும்.