TamilSaaga

குகன் தாஸ்… சிவகார்த்திகேயனால் இந்த பெயர் ட்ரெண்டானது. என்ன காரணம்?

நடிகர் சிவாகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் என பெயர் வைத்திருப்பது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டானது. காரணம்,அது அவருடைய அப்பா பெயராகும்.

தமிழில் Top 5 முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.கலக்கப் போவது யாரு என்கிற காமெடி நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, அதில் வெற்றி கண்டு பின் ஜோடி நம்பர் வன் தொகுப்பாளராக மாறி இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் சிவாவுக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.

கடந்த தேர்தலில் வாக்குப் பதிவு செய்ய வந்த சிவகார்த்திகேயன் மற்றும் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதை அறிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்த அவரின் ரசிகர்கள் இன்று அவரின் மகன் பெயரையும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளனர்.

சிவாவின் அப்பா சிறுவயதில் மரணம் தழுவ 18 வருடங்களுக்கு பிறகு என்னுடைய அப்ப கையை பிடிக்கிறென் என்று மகன் பிறந்த அன்று சிவா பதிவிட்டிருந்தது நெகிழ வைத்திருந்தது. இந்நிலையில் இவர் அப்பா பெயரான குகன் தாஸ் இன்று அவரின் மகனுக்கு சூட்டி அழகு பார்த்துள்ளார்.

Related posts