தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து மணமுடித்துக் கொண்டார். சமீபத்தில் instagramயில் அதிகார கணக்கு தொடங்கிய நயன்தாரா தனது இரு மகன்களை கைகளில் தூக்கி டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு மாஸாக என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதில் குழந்தைகளின் முகம் தெரியாத வகையில் கையில் வைத்திருந்தார்.
இந்நிலையில் தனது இரட்டை குழந்தைகளின் பிறந்தநாள் வருவதை ஒட்டி அவர்களின் முகங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் படியாக தம்பதிகள் இணைந்து முகங்களை காட்டியுள்ளனர். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நயன்தாரா குழந்தைகளை பற்றி அவ்வப்பொழுது வெளியிடும் வீடியோ சமூகத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படமும் தற்போது வைரல் ஆகியுள்ளது.
அதில் அம்மாவும் அப்பாவும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவில் உங்களை காதலிக்கிறோம் என்றும் நீங்கள் தான் எங்கள் வாழ்வின் உயிர் என்றும் வருணித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தை வெளியிடுவதற்காக நாங்கள் ஒரு வருடம் காத்திருந்தோம் எனவும் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கின்றனர். மேலும் ‘என் முகத்தினை கொண்ட என் உயிர் எனவும் என் குணத்தினை கொண்ட என் உலக்’ எனவும் குழந்தைகளை வர்ணித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.