நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு சம்பவம்தான் காதல் தோல்வி. இதை கடந்து வராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதுவரை நீங்கள் காதல் தோல்வியை சந்திக்காமல் இருந்தால் மிக விரைவில் காதல் தோல்வியை சந்திக்க நேரிடும். ஒருவேளை சந்தித்து இருந்தால் இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
அப்படி சந்திக்காமல் போனால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய உணர்ச்சிமயமான ஒரு அனுபவத்தை பெறாத துரதிஷ்டசாலி ஆவிர்கள். ஒருவேளை உங்கள் நண்பர்கள் யாராவது பிரேக் அப்பில் புலம்பி கொண்டிருந்தால் அவர்களையும் சேர்த்துகொண்டு இந்த டாப் லவ் பிரேக்கப் படங்களை பாருங்கள்.
நீங்களே உங்களை புதியதாக உணர்வீங்க..
தளபதி
இளம்பெண் மற்றும் அடிதடி செய்யும் நாயகன் இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல், தொடங்கிய சில மாதங்களிலேயே பிரிந்து அந்த நாயகனின் உடன்பிறந்த சகோதரனை திருமணம் செய்து கொள்கிறாள் அந்தப் பெண். இப்படி மனதை புண்படுத்தும் கதையைக் கொண்ட இந்த வாலிபன் காதல் தோல்வியை எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதை உணர்த்தும் படம்தான் இது.
96
பள்ளி பருவத்தில் ஏற்பட்ட அழியாத காதல் காலப்போக்கில் ஆழமான காதலாக மாறியதை இனிமையான இசையுடன் சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இது. உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கட்டாயம் தரும்.
விண்ணைத்தாண்டி வருவாயா
தமிழில் ஒரு முழுநீள காதல் தோல்வி படமாக வெளிவந்தது விண்ணைத்தாண்டி வருவாயா. இதை பார்த்தவுடன் பலருக்கும் நம் வாழ்க்கையிலும் இதுபோல்தான் ஏற்பட்டுள்ளது என்ற உணர்வை தந்தது தான் இந்த படத்தின் வெற்றி.
காதல்
இளம் வயதில் பள்ளிக்குச் செல்லும் பெண்ணுக்கும் அதே ஏரியாவில் மெக்கானிக்காக வேலை செய்யும் முருகனுக்கும் இடையே ஏற்படும் முதல் காதலை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இது. இவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதினால் இவர்கள் காதலை பிரிந்து இறுதியில் எந்த விதமான சூழ்நிலையில் இணைகிறார்கள் என்பதை தத்ரூபமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். இது ஒரு உண்மை சம்பவமும் கூட.
மதராசபட்டினம்
சுதந்திரம் கிடைப்பதற்கு முன் சென்னையை ஆங்கிலேயர்கள் ஆட்சி அமைத்திருந்தார்கள். அப்பொழுது துணி துவைக்கும் தொழிலை செய்து வந்த ஒரு ஏழ்மையான இளைஞனுக்கும், ஆங்கிலேய ஆட்சியில் இருக்கும் அதிகாரியின் மகள் இருவருக்கும் ஏற்படும் உணர்வுபூர்வமான காதலைப்பற்றி சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இது.
சேது
காதல் வெறித்தனமானது என்பதை உணர்த்தும் படம்தான் சேது. அக்ரஹாரத்து பெண்ணின் மேல் காதல் வயப்படுகிறான். இதை சொல்லும்விதமாக இருக்கட்டும் அவன் காதலை வெளிப்படுத்தும் செயல்களாக இருக்கட்டும், என அனைத்தும் முரட்டுத் தனமாகவே இருக்கும். இறுதியில் இவர்கள் காதல் என்னவானது என்பதை வலிமிகுந்த திரைக்கதையில் சொல்லியிருப்பார் இயக்குனர்.
ஆட்டோகிராப்
காதலின் முப்பரிமாணம் என்ற இந்த படத்தை சொல்லலாம். பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல், திருமணத்தில் ஏற்படும் காதல் வரை எல்லாவற்றையும் தத்ரூபமான முறையில் சொல்லியிருப்பார் இயக்குனர் சேரன்.
காதல் தோல்வியை உணர்த்தும் இந்த திரைப் படங்களை தவிர்த்து ஏராளமான படங்கள் இருக்கின்றன. ஆனால் காதல் தோல்வி ஒருவரை எந்த அளவுக்கு பாதிக்கச் செய்யும் என்ற உணர்வை அனுபவித்தால் தான் நமக்கு புரியும். எனவே அப்பேர்ப்பட்ட அனுபவத்தைப் பெற்று, மீண்டு வர முடியாமல் தவிப்பவர்கள் தங்களை சாந்தப்படுத்துவதற்காக இதுபோன்ற படங்களைப் பார்த்து உங்கள் காதல் தோல்வியை கடந்து வரலாம்.