TamilSaaga

வேறு மாநிலங்களில் ஷூட்டிங் எடுத்துவிட்டு.. தமிழகத்தில் நடப்பது போல் காட்டிய 5 படங்கள்

சினிமா என்பது ஜாதி, மதம், இனம், மொழி என்று அனைத்தையும் தகர்த்தெறியும் ஒரு மீடியம் எனலாம். தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறது என்றால், மேலே குறிப்பிட்ட நான்கு விஷயங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் வந்து, கைத்தட்டி, விசில் அடித்து கொண்டாடுவார்கள். சினிமா நம்மை 50 வருடங்களுக்கும் மேல் ஆட்கொண்டு வருகிறது என்றும் கூறலாம். மேஜிக் நிறைந்த உலகம் இது. அப்படிப்பட்ட மேஜிக்கை நம்மிடம் காட்டிய சில படங்களைத் தான் பார்க்கப்போகிறோம். அதாவது, தமிழகத்தில் கதை காட்சியமைப்புநடப்பதாய் காட்டிவிட்டு, வேறு எங்கோ ஒரு மாநிலத்தில் ஷூட்டிங் எடுத்து நமக்கே காதில் பூ சுற்றிய 5 படங்களை பார்க்கலாம், வாங்க.

வீரம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார், தமன்னா, சந்தானம் நடித்து 2014ல் வெளியான படம் வீரம். பல வருடங்களுக்கு பிறகு அஜித்தை கிராமத்துப் பின்னணியில் பார்த்த மக்கள், படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினார்கள். கதைப்படி நாயகர் அஜித், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசிப்பதாக காட்டப்படும். ஆனால், உண்மையில் பல காட்சிகள் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலும், புனேவிலும் தான் எடுக்கப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடிய இப்படத்தின் ரயில் சண்டைக் காட்சிகள் ஒரிசாவில் எடுக்கப்பட்டது.

காலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தின் காட்சியமைப்பு, மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் நடப்பது போன்று காட்டியிருப்பார்கள். உண்மையில், தாராவி போன்று காட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் செட் தான். சென்னையில் புறநகரில் 12 ஏக்கர் நிலப்பரப்பில், 20 கோடி ரூபாய்க்கு செட் போட்டு எடுக்கப்பட்ட காட்சிகள் தான் அனைத்தும்.

லிங்கா

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவசர அவசரமாக எடுக்கப்பட்ட படம் “லிங்கா”. அப்படத்தின் பாடல்கள் உண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது தான் என்றால் அந்த இசையே ஒப்புக் கொள்ளாது. அந்த படத்தில் வரும் “அணை” காட்சிகள் பிரம்மாண்டமாக காட்டப்பட்டிருக்கும். அந்த அணை ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் உருவாக்கப்பட்ட செட் தான். மற்றபடி பெரும்பாலான காட்சிகளை கர்நாடகாவில் தான் எடுத்தார்கள்.

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ்.. பாலிவுட்டில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏதோ ஒரு தமிழகத்தின் கிராமத்தில் நடப்பது போல் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஷூட்டிங் எங்கு நடந்தது தெரியுமா? மகாராஷ்டிராவில் உள்ள ஒரு Wai எனும் சிறிய டவுனில் தான் எடுக்கப்பட்டது.

பஜ்ரங்கி பைஜான்

மற்றொரு பாலிவுட் படம். நம்ம தமிழ் ரசிகர்களே பலரும் பார்த்து ரசித்த திரைப்படம் எனலாம். சல்மான் கான் நடித்து சூப்பர் ஹிட்டானது இந்த பஜ்ரங்கி பைஜான். “பாகுபலி” இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் இப்படத்தின் கதாசிரியர். கதைப்படி பெரும்பாலான காட்சிகள் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டிருப்பதாக காட்டியிருப்பார்கள். ஆனால், காட்சிகள் அனைத்தும் காஷ்மீரில் தான் எடுக்கப்பட்டது. இதை பாகிஸ்தான் ரசிகர்களும் விழுந்து விழுந்து ரசித்தது தான் ஹைலைட்.

Related posts