TamilSaaga

“சிங்கப்பூர் வரும் VTL அல்லாத இந்திய பயணிகள்” : சிங்கப்பூர் அளித்த “அசத்தல் தளர்வு” – என்ன அது? முழு விவரம்

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் VTL அல்லாத பயணிகள் அவர்களது 10 நாள் SHN காலத்தை அளிக்கவுள்ள நிலையில் அவர்கள் On-Arrival சோதனை மேற்கொள்ளவேண்டிய அவசியம் இனி இல்லை. அதேபோல VTL பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அவர்கள் சிங்கப்பூர் வந்த ஏழாவது நாள் வரை கோவிட்-19 சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை தற்போது நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “பிறந்தது புத்தாண்டு.. மறையும் துன்பங்கள்” : Changi Airport Terminal 5ல் இருந்து ஒரு தமிழரின் “மகிழ்ச்சியான பதிவு”

List of Countries under Category 1 to 4

சிங்கப்பூரின் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) ஏற்பாடு அல்லாமல் பிற சேவைகள் மூலம் சிங்கப்பூருக்குள் பயணிப்பவர்களுக்கு COVID-19 நடவடிக்கைகளை சிங்கப்பூர் எளிதாக்கும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 31) வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது. வரும் ஜனவரி 7, 2022 அன்று இரவு 11.59 மணி முதல், வகை 2 முதல் 4 வரை உள்ள நாடுகளைச் சேர்ந்த VTL அல்லாத பயணிகள் இனி சிங்கப்பூருக்கு வந்திறங்கியதும் On-Arrival கோவிட்-19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.

வகை 2 மற்றும் 3 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முறையே ஏழு மற்றும் 10 நாட்களுக்கு வீட்டிலேயே தங்கியிருப்பதற்கான அறிவிப்பை வழங்க வேண்டும். வகை 4 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அரசு கூறும் ஒரு பிரத்யேக விடுதி அல்லது இடத்தில் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். Omicron வேறுபாட்டின் தன்மையை அறியவே முன்னதாக On-Arrival சோதனை எடுக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர் என்றும், ஆனால் தற்போது “Omicron மாறுபாடு பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளதால், VTL அல்லாத பயணிகளுக்கான OATகள் (வருகை சோதனைகள்) இனி தேவைப்படாது என்பதை அறிவித்துக்கொள்கிறோம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : பயன்படுத்தப்பட்ட “ஆணுறை”.. கோவில் உண்டியலில் போட்ட ஆசாமி – புத்தாண்டை மறக்க முடியாத அளவுக்கு முகம் சுளிக்க வைக்கும் வாக்குமூலம்

அவர்களுடைய SHN கால முடிவில் அவர்கள் PCR பரிசோதனையில் எதிர்மறையான சோதனை செய்ய வேண்டும், இது “மேலும் பரவும் அபாயத்தைக் குறைக்கும்” என்று அமைச்சகம் கூறியது. ஹாங்காங், மக்காவ், சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 1-வது வகையின் கீழ் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் அவர். அவர்கள் வீட்டில் தங்குவதற்கான அறிவிப்பை வழங்கத் தேவையில்லை, அவர்கள் வந்தவுடன் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts