அச்சுறுத்தும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக, கோவை – சிங்கப்பூர் விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. கோவிட் தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக, கோவையில் இருந்து இயங்கிய சர்வதேச போக்குவரத்து பிரிவில் தொடர்ந்து தடைகள் நீடித்து வருகிறது.
தற்போது கோவை – ஷார்ஜா இடையே, ஏர் அரேபியா விமான சேவை மட்டும் அனைத்து நாட்களும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம், சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு கோவையிலிருந்து விமான சேவை துவங்காமல் உள்ளது.
BIG BREAKING: 10 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கிய சிங்கப்பூர்
இந்த சூழலில், ஏற்கனவே சிங்கப்பூருக்கு விமான சேவை வழங்கி வந்த, ‘FlyScoot’ நிறுவனம், கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை டிசம்பர் 29 முதல் air bubble ஏற்பாட்டின் கீழ் தொடங்கும் என்று விமான நிலைய இயக்குநர் எஸ். செந்தில் வளவன் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்கும் என்று அவர் கூறினார். இந்த விமானங்கள் டிசம்பர் 29 முதல் கோவை விமான நிலையத்திற்கு இரவு 10.45 மணிக்கு சென்று சேரும். அதேபோல், கோவையில் இருந்து 11.45 மணிக்கு சிங்கப்பூர் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழநிலையில், ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க துவங்கியிருப்பதால், இந்த சேவை மீண்டும் துவங்குவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள்: பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? – தேவையான Links உள்ளே
இதுகுறித்து, கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “கோவை – சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவை துவக்குவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாய்ப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒமைக்ரான் தொற்று பரவல், கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் திட்டமிட்டப்படி, கோவை- சிங்கப்பூர் விமான சேவை துவங்குவதில் சந்தேகம் உள்ளது. அந்த நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக ஏதேனும் அறிவித்தால் மட்டுமே இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளனர்.