TamilSaaga

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாய 7 நாள் தனிமைப்படுத்துதல் – கடுமையாக்கப்படும் கட்டுப்பாடு

உலக அளவில் இந்த தொற்றுநோய் ஒரு முடிவுக்கு வரும் என்று அனைவரும் பல கனவுகளோடு இருந்த இந்த நேரத்தில் பெரும் இடியாக தற்பொழுது வந்து இறங்கியுள்ளது தான் Omicron என்ற புதிய வகை தொற்று மாறுபாடு. இது இதற்கு முன்பு தோன்றி நம்மை அச்சுறுத்தி வரும் டெல்டா வகை தொற்றை விட அதிவேகத்தில் பரவக் கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் நிலையில் உலக அளவில் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இந்த Omicron தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவாகி வருகின்றன.

இதையும் படியுங்கள் : 2022ம் ஆண்டு ஓமிக்ரான் “ஆதிக்கம்” செலுத்தும்

இந்த நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள தமிழகத்திலும் சுமார் 34 பேர் இந்த வகை வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியபோது Omicron அச்சம் காரணமாக “வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய ஏழு நாள் (26.12.2021 முதல்) தனிமைப்படுத்தல் விதிக்கப்படுகிறது” என்று சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டங்களை பெரிய அளவிலான நட்சத்திர விடுதிகளில் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூட்டமாக புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல நாடுகள் இந்த Omicron மாறுபட்டால் மீண்டும் தங்கள் எல்லைகளை கடுமையாகி வருகின்றது. சிங்கப்பூர் அரசும் தனது VTL சேவையை தற்காலிகமாக நிறுத்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts