TamilSaaga

“மண்ணை விட்டு மறைந்த பிபின் ராவத்” : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சிங்கப்பூர் தூதரக அதிகாரி

ஏற்கனவே இந்த 2021-ம் ஆண்டில் பல துக்ககரமான செய்திகளை நாம் கேட்டு வரும் நிலையில் இந்த 2021ம் ஆண்டு முடிவடையும் இந்த தருணத்தில் பலருக்கும் பேரதிர்ச்சியாக அண்மையில் நடந்த ஒரு விபத்து தான் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களின் மரணம். சூலூர் விமானப்படை தளத்திலிருந்து தமிழகத்தின் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத் அவர்கள் தனது மனைவி உள்ளிட்ட 14 பேருடன் ராணுவ ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.

இதையும் படியுங்கள் : சட்டென்று தாக்கிய நீர்நாய் கூட்டம் – நிலைகுலைந்த நபருக்கு 26 கடிகள்

அப்பொழுது குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டேரி பூங்கா என்ற இடத்தில் சென்ற பொழுது அந்த ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தது நம் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த Group Commander ஒருவர் மட்டும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டெல்லி கொண்டு வரப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் கடிதங்களை அனுப்பினார்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஹை கமிஷனர் Simon Ong மற்றும் Raymond Ong ஆகிய இருவரும் சிங்கப்பூர் CDF மற்றும் ஆயுதப்படை சார்பாக பிபின் ராவத் அவர்களுடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts