TamilSaaga

அதிவேகமாக வந்த கார் : 64 வயது ஆடவர் மரணம் – ஓட்டுநருக்கு 6 மாத சிறை

சிங்கப்பூரின் தெம்பனிசில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கூடுதலான வேகத்தில் வாகனத்தை செலுத்தி சைக்கிள் ஓட்டி ஒருவரை மோதிய ஆடவருக்கு 26 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 8 ஆண்டுகள் வாகனம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவை கடந்து அதிவேகத்தில் காரை செலுத்தி 64 வயது ஆடவரை கொன்ற குற்றத்திற்காக ஜான்சன் என்பவருக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 49 வயதான ஜான்சன் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி தெம்பனிசில் பேருந்து ஒன்றை முந்திக்கொண்டு சென்றுள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனத்தை செலுத்தினார், அப்போது சாலையை வண்ண குடைகளுடன் கடக்க முயன்ற 64 வயது ஆடவர் ஒருவரை பலமாக மோதியுள்ளார்.

நிலைகுலைந்த அவரை ஜான்சன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார். இருப்பினும் அடுத்த நாள் காலை அந்த 64 வயது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts