TamilSaaga

தடுப்பூசி போட மறுத்தவர்களை பணியிலிருந்து நீக்கியதா நிறுவனங்கள்? – சிங்கப்பூர் மனிதவள அமைச்சு விசாரணை

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸார் மற்றும் சிங்கப்பூர் முதலாளிகள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல், நிறுவனங்கள் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்து சில வழிமுறைகள் வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அதனை மறுத்த பணியாளர்களை வேலையை விட்டு நீக்கிய அல்லது நீக்க திட்டமிடுதல் பற்றி மனிதவள அமைச்சு விசாரனை நடத்த திட்டமிட்டுள்ளது என அமைச்சர் கோ போ கூன் கூறியுள்ளார்.

நிறுவனங்களும் முதலாளிகளும் பணியாளர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூறி கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரு வேலை கொரோனா சூழல் மிக மோசமான நிலையை அடைந்தால் மட்டுமே கட்டாயப்படுத்துவதை பற்றி சிந்திக்கலாம்.

வேறு ஏதேனும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயாலாத சூழலில் அவர்களை தொற்றிலிருந்து காக்க மாற்று வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts