சிங்கப்பூரில் இந்த ஜூலை மாத முற்பகுதியில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தற்போது எச்சரித்துள்ளது. சிங்கப்பூரில் இந்த ஜூலை மாதம் முழுவதும் வடமேற்கு பருவ மழை நீடிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் இந்த மாத தொடக்கத்தில் முதல் வாரத்தில் இருந்து பிற்பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். மேலும் அடுத்து வரும் இரண்டாம் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறுகிய நேரம் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.
பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 24 இல் இருந்து 33 டிகிரி செல்சியசுக்கு உள்ளக இருக்கும் என்று கூறப்படுகிறது. பகல் நேரத்தில் 34 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்ப நிலை, இரவு நேரங்களில் குறைந்தபட்சம் 28 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகின்றது.