TamilSaaga

“சிங்கப்பூரில் நுகர்வோர் அடுத்த ஆண்டு மின்சார விலையில் அதிகரிப்பை காண வாய்ப்பு” – அமைச்சர் டான் சீ லெங்

சிங்கப்பூரில் பெரும்பாலான நுகர்வோர் மின்சார விலையில் உடனடி உயர்வைக் காணவில்லை என்றாலும், உலகளவில் எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதால், அடுத்த ஆண்டு அவர்களின் மின் கட்டணங்கள் உயரக்கூடும் என்றும் சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான நுகர்வோர், சில்லறை விற்பனையாளர்களுடனான நிலையான விலைத் திட்டங்களில் அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டண விகிதத்தில் 99 சதவீதத்துடன் “ஓரளவு மெத்தனமாக” உள்ளனர் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான துணை அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் இன்று திங்கள்கிழமை (நவம்பர் 11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏறக்குறைய 96 சதவீத வணிகங்களும் நிலையான விலை அல்லது தள்ளுபடி-கட்டணத் திட்டங்களில் உள்ளன என்று டாக்டர் டான் கூறினார். “சிங்கப்பூரில் எரிவாயு அல்லது மொத்த மின்சாரத்தின் விலையை விட மிகக் குறைவாகவே உயர்ந்துள்ளன. இருப்பினும், உலகளாவிய நிலையில் உயரும் எரிபொருள் விலைகள் இறுதியில் மின்சார உற்பத்தி செலவை பிரதிபலிக்கும் வகையில் நமது மின் கட்டணத்தில் ஊட்டமளிக்கும்.”
அதே நேரத்தில் தகுதியான குடும்பங்கள் தங்கள் பயன்பாட்டுச் செலவுகளுக்கு ஆதரவாக U-சேவ் தள்ளுபடிகளை தொடர்ந்து பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நிதி அமைச்சகத்துடன் இணைந்து நிலைமையைக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு மேலும் உதவி தேவையா என்பதை ஆய்வு செய்யவும் தொடர்ந்து செயல்படும் என்றார் அவர்.

இந்த நிலையற்ற சந்தை நிலைமைகள் ஏற்கனவே சிங்கப்பூரில் ஐந்து மின்சார சில்லறை விற்பனையாளர்களை சிங்கப்பூர் சந்தையில் இருந்து விளக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. iSwitch, Ohm Energy, Best Electricity, UGS மற்றும் SilverCloud எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் கடந்த மூன்று வார காலத்தில் சிங்கப்பூர் சந்தையில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Related posts