TamilSaaga

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் “இப்படி தான்” தொற்றிலிருந்து குணமடைகின்றனர் – அமைச்சர் வெளியிட்ட காணொளி

சிங்கப்பூரில் பணி செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்தால் என்ன நடக்கும்? என்று ஒரு காணொளியோடு விளக்கம் அளித்துள்ளார் மூத்த மாநில அமைச்சர் (சுகாதாரம் மற்றும் மனிதவள அமைச்சகம்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் Koh Poh Koon வெளியிட்டுள்ளார். தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்கள் விரைவாக குணமடைய முதலில் பிரத்யேக மீட்பு வசதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றார் அவர்.

“அங்கு அவர்கள் சமூகத்தின் அதே அளவிலான கவனிப்பைப் பெறுகிறார்கள். இது MOH-ன் வீட்டு மீட்புத் திட்டத்தைப் போன்றது. தங்குமிடங்களில் வசிக்கும் எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதால், அவர்கள் அறிகுறியற்றவர்களாகவோ அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களாகவோ இருக்கிறார்கள்.”

“அவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் குணமடைகிறார்கள். வேலையாட்களில் பாதிப்பேர் அவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 4ம் நாளுக்குள் குணமடைவார்கள், பெரும்பாலானோர் 7ஆம் நாளுக்குள் குணமடைவார்கள்” என்று மேலும் அவர் கூறினார். நேற்று (அக்டோபர் 29) ஒரே நாளில் சிங்கப்பூரில் 536 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts