TamilSaaga

“சிங்கப்பூர் ஜாலான் துகாங் Dormitory” : மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்களுக்கு சோதனை – Sembcrop விளக்கம்

சிங்கப்பூரில் உள்ள வெஸ்ட்லைட் ஜலான் துகாங் தங்குமிடத்தில் தங்கியிருக்கும் அதன் 1,400 தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு பெருந்தொற்று ஆன்டிபாடிகளை சரிபார்க்க தங்கள் serology சோதனைகளை எடுத்துள்ளனர் என்று செம்ப்கார்ப் மரைன் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) வெளியிட்ட ஒரு பதிப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள சுமார் 53 சதவீதம் பேர், அதாவது தோராயமாக 750 தொழிலாளர்கள் சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசி பதிவேட்டில் உள்ளனர் மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

மோசமான உணவு மற்றும் பெருந்தொற்று பாதித்த தொழிலாளர்களை தனிமைப்படுத்துதல் விடுதிகளுக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட விஷயங்கள் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் தேசிய நோய்த்தடுப்பு பதிவேட்டில் பதிவு செய்வதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாத தொழிலாளர்களுக்கு சினோவாக் மற்றும் சினோஃபார்ம் உட்பட – தடுப்பூசிகளை வழங்குவதாகவும், செவ்வாய்க்கிழமை முதல் இந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பயிற்சி நடந்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் ஊழியர்களுக்கு வழங்கிய உணவில் தேவையற்ற பொருட்கள் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணையைத் தொடங்கியுள்ளது அந்நிறுவனம். இதுவும் பூச்சிகள், புழுக்கள் மற்றும் செய்தித்தாள் துண்டுகள் அடங்கிய பேக் செய்யப்பட்ட சாப்பாட்டைக் காட்டும் புகைப்படங்கள் ஆன்லைனில் பரவி, கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நேரடி Feedback-களை வழங்குவதற்காக தனது ஊழியர்களுக்காக கூடுதல் ஈடுபாடுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும், “தொழிலாளர்களின் Feedbackன் அடிப்படையில் குறிப்பிட்ட மேம்பாடுகளைச் செய்ய” Catersவுடன் இணைந்து பணியாற்றியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts