TamilSaaga

“சிங்கப்பூரில் தீபாவளி உற்சவம் 2021” : வண்ண விளக்குகளால் மின்னும் செராங்கூன் சாலை – கண்கவர் காணொளி உள்ளே

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் LiSHA என்ற (Little India Shopkeepers and Heritage Association) குழுமம் கடந்த 2001ம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெருந்தொற்று காரணமாக மிகப்பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது இவ்வாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றது LiSHA.

இந்நிலையில் செரங்கூன் மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலைகளில் உள்ள அழகான விளக்குகளின் அணிவகுப்பு “தீபாவளி உற்சவம் 2021ன்” தொடக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. மக்கள் பார்வையிடும்போது தயவுசெய்து பாதுகாப்பான தூர வழிகாட்டுதல்களை நினைவில் கொள்ளுங்கள். தீபாவளி 2021ஐ அனைவரும் இணைந்து பாதுகாப்பாக கொண்டாடுவோம் என்று LiSHA தெரிவித்துள்ளது.

LiSHA குழுமம் வெளியிட்ட கண்கவர் காணொளி

இந்நிலையில் Deepavali LitUp 2021ல் பங்கேற்ற மனிதவள அமைச்சர் டன் சீ வெளியிட்ட முகநூல் பதிவில் “தீபாவளி, இது விளக்குகளின் திருவிழா என்று அழைக்கப்படுகிறது, இது இருளின் மீதான ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் மற்றும் தீமையின் தனது ஆட்சியை செலுத்தும் நல்லதை கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகையாகும். இது நமது இந்து சமூகத்திற்கு மட்டுமல்ல, சிங்கப்பூரில் உள்ள நம் அனைவருக்கும், எங்கள் தனித்துவ அடையாளத்தை பல இன மற்றும் பல கலாச்சார தேசமாக கொண்டாடுகிறோம். நேற்று மாலை தீபாவளி லைட்-அப் விழா 2021ன் துவக்கத்திற்கு என்னை அழைத்த லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் & பாரம்பரிய சங்கத்திற்கு (லிஷா) என் நன்றி” என்று குறிப்பிட்டுருந்தார்.

“இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு விழாவைக் கொண்டாடுவதும் திட்டமிடுவதும் ஒரு மகத்தான பணியாகும். LiSHAவில் உள்ள ஏற்பாட்டுக் குழுவுக்கு எனது பாராட்டுக்கள்”. “இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட வலிமையையும், நம்பிக்கையையும், தொற்றுக்கு எதிரான எங்கள் போரைத் தொடரும் போராட்ட மனப்பான்மையையும் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.” “ஒன்றாக, நாம் நம் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். எங்கள் இந்து நண்பர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்கள்!” என்று கூறினார்.

Related posts