இப்படியுமா நடந்து கொள்வார்கள்? கிரிக்கெட் போட்டி ஒன்று விளையாடப்பட்டு கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனாவுக்கு பிறகு இப்போது தான் விளையாட்டு உலகம் இயங்க தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பத் தொடங்கியிருக்கிறது. அடுத்த மாதம் ஒலிம்பிக் கூட நடைபெறவிருக்கிறது.
குறிப்பாக, இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து தற்போது இயல்பு நிலைக்கு அந்நாடு திரும்பியுள்ளது. இதனால், அங்கு விளையாட்டு போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
பல்வேறு நாடுகளில் போட்டிகள் நடந்தாலும், ரசிகர்களுக்கு நேரில் பார்க்க அனுமதி இல்லை. ஆனால், இங்கிலாந்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுவாக, எந்த விளையாட்டாக இருந்தாலும், அங்கு ரசிகர்கள் அதிகளவில் கூடியிருக்கும் போது அவ்வப்போது ஏதேனும் அத்து மீறல்கள் நடைபெறுவது இயல்பு தான்.
ஆனால், இங்கு ரசிகர் ஒருவர் அந்த எல்லையை மீறி சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். லண்டனில், உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த ஜூன் 16ம் தேதி நடந்த போட்டி ஒன்றில் சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் அணிகள் மோதின.
அப்போது, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த போது, பெண் பார்வையாளர் ஒருவர் தனக்கு பின்னால் அமர்ந்திருந்த நபர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் இருந்த ஒருவர், அந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டது தெரிய வந்திருக்கிறது.
இந்த சம்பவத்தை யாரும் கவனிக்கவில்லை என்று அவர் நினைத்தாலும், கேமராக்கள் விடுமா என்ன? தெளிவாக படம் பிடித்துவிட, இப்போது அது வைரலாகி வருகிறது. பலரும், பெண்ணிடம் அத்துமீறிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.