TamilSaaga

அமெரிக்காவின் Newsweek தொடங்கிய புதிய “பயண விருதுகள்” – முதல் வெற்றியை பதிவு செய்த நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

உலகம் முழுவதும் பரவி வரும் இந்த பெருந்தொற்று உலக அளவில் பல வணிகங்களை சீரழித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலிலும் நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சாங்கி விமான நிலையம் மீண்டு வருவதற்கான ஒரு அங்கீகாரத்தை அளித்துள்ளது ஒரு சிறப்பு விருது. அமெரிக்க பத்திரிகை நிறுவனமான “நியூஸ்வீக்” நடத்திய முதல் “Future of Travel” விருதுகளின் சர்வதேச விமானப் பிரிவில் SIA கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 16) வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த போட்டியில் ஏர் பிரான்ஸ், ஏர் நியூசிலாந்து, எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற பல விமான சேவை நிறுவனங்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நியூஸ்வீக் விருதுகள் எட்டு பிரிவுகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றியமைக்கக்கூடிய, நிலையான, பொறுப்பான, புதுமையானஉள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில்கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

மேலும் இந்த விருது வழங்கும் நிகழ்வின் நீதிபதியான சாக் ஹானிக், டிராவல் வலைத்தளமான The Points Guyன் எடிட்டராக உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், SIA நிலையான எரிபொருளில் முதலீடு செய்தல், உள்ளூர் பண்ணைகளில் இருந்து சில வகையான விளைபொருட்களை ஆதரித்தல், 2050-க்குள் கார்பன் உமிழ்வை முற்றிலும் குறைதல் போன்ற பல முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக புகழாரம் சூட்டினார்.

நிலைத்தன்மையில் அதன் முயற்சிகளுக்கு அப்பால், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற அனுபவத்தை அவர்கள் அனுபவிக்க அவர்களின் முழு பயணத்தையும் மேம்படுத்தியுள்ளதாக SIA குறிப்பிட்டது. சாங்கி விமான நிலையக் குழுவின் செய்தித் தொடர்பாளர் இவான் டான், “படிப்படியாக தேவைகளை அதிகரிப்பதால், பயணிகளுக்கு எப்படி நன்றாக சேவை செய்ய முடியும் என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகின்றாம்.” அதே சமயம் இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் பயணிகளின் உடல்நலத்திலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்” என்றார்.

SIA விமானங்களில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 19.2 சதவிகிதம் மட்டுமே பயணிகளால் நிரப்பப்பட்டன. இது பெருந்தொற்று வருவதற்கு முன்பு, கடந்த ஆகஸ்ட் 2019ல் 86.3 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 2019ல் 5.91 மில்லியன் மக்கள் சாங்கி விமானம் வழியாக சென்ற நிலையில் இந்த ​​ஜூலை மாதத்தில் வெறும் 2,04,000 பயணிகள் மட்டுமே சாங்கி விமான நிலையத்தின் வழியாக சென்றுள்ளனர்.

Related posts