TamilSaaga

“வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்கள்” : சிறப்பு தடுப்பூசி திட்டம் அறிமுகம் – எப்படி செயல்படுத்தப்படும்? Full Report

உலக அளவில், மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் விகிதத்தில் சிங்கப்பூர் முன்னோடி நாடாக திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிங்கப்பூர் தனது மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி அளித்துள்ளது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்க ஆயத்தம் செய்து வருகின்றது சிங்கப்பூர் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்களும் இந்த தடுப்பூசிகளை பெற தற்போது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மற்றும் தனா மேரா படகு துறைமுகத்தின் வழியாக சிங்கப்பூருக்குள் வருபவர்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை செலவிடாமல் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அடுத்த விமானத்திலேயோ அல்லது படகிலேயோ அவர்கள் தங்கியிருக்கும் நாட்டிற்கு திரும்பச் செல்லலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் சிங்கப்பூரர்கள் முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகு அரசு தெரிவிக்கும் மையங்களில் தனிமைப்படுத்துதலில் இருந்து இரண்டு தடுப்பூசி காலம் வரை இருந்துவிட்டு அடுத்த இரண்டாவது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொண்டு அதன் பிறகு அவர்கள் தங்கியிருக்கும் நாட்டிற்கு திரும்பலாம் என்றும் சுகாதார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 568ஆக இருந்த உள்ளூர் தொற்றின் அளவு என்பது நேற்று 550ஆக குறைந்துள்ளது. மேலும் தீவில் தொடர்ந்து தடுப்பூசி அளிக்கும் பணி விரைவுபடுத்துள்ளது.

Related posts