TamilSaaga

“உனது நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவேன்” : சிங்கப்பூரில் Tinder மூலம் பெண்ணை மிரட்டிய நபர் கைது

சிங்கப்பூரில் டேட்டிங் தலமான “டிண்டரில்” ஜேக் என்று அழைக்கப்படும் ஒரு நபர் பல பெண்களை ஏமாற்றி அவர்களுடைய நிர்வாண புகைப்படங்களை தனக்கு அனுப்ப வைத்துள்ளார். மேலும் அந்த பெண்களில் நிர்வாண புகைப்படங்களை கொண்டு அந்த பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார் Ong Chun Siang என்ற அந்த நபர். அதற்கு அந்த பெண்கள் மறுத்தால் அவர்களுடைய அந்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

சிங்கப்பூர் துணை அரசு வழக்கறிஞர் (DBB) ஷென் வான்கின் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அந்த நபரின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து அவருக்கு இணங்கவில்லை என்று கூறினார். மாறாக அவர்கள் அந்த ஓங் என்பவருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர் என்றும் கூறினார். 25 வயதான அந்த சிங்கப்பூரர் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) குற்றவியல் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டு ஆகிய இரண்டு வழக்குகளில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் இரண்டு பெண்களை உள்ளடக்கியது.

கடந்த 2018ம் ஆண்டு அவர் அந்த டின்டேர் கணக்கை தொடங்கியுள்ளார். அவர் ஜேக் என்று அழைக்கப்படும் ஒரு மனிதனைப் போல நடித்துள்ளார். மேலும் தனக்கு 30 வயது நிரம்பியுள்ளது என்று கூறி பல பெண்களிடம் அவர்களின் அலைபேசி எண்களை பெற்று “வாட்ஸ்அப்” செய்தி தளத்தில் அவர்களுடன் பேச தொடங்கியுள்ளார். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவர்களுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அந்த ஆண் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி பதிலுக்கு அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை கேட்க அவரும் வேறு வழியின்றி தனது புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதை வைத்து அவருக்கு பாலியல் சேவை செய்யவேண்டும் என்றும் இல்லையென்றால் ஆபாச வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களை பதிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

Related posts