TamilSaaga

சிங்கப்பூர் கால்வாயில் joss பேப்பரை வீசிய நபர்கள்.. நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் – NEA அறிவிப்பு

சிங்கப்பூர் கிழக்கு கடற்கரையில் கால்வாயில் ஜாஸ் பேப்பரை வீசும் வீடியோவில் சிக்கிய மூன்று பேர் மீது தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (என்இஏ) நடவடிக்கை எடுக்கும் என்று அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை (செப் 3) தெரிவித்துள்ளது

தி லோக்கல் சொசைட்டி சமூக ஊடகத்தினால் பகிரப்பட்ட வீடியோவில், பெயர் குறிப்பிடப்படாத மூன்று பேர், ஜாஸ் பேப்பர் பெட்டிகளை கால்வாயில் வீசுவது கண்டறியப்பட்டது.

ஆகஸ்ட் 22 அன்று கிழக்கு கடற்கரை சேவை சாலையில் நடந்த சம்பவம் குறித்து என்ஈஏ தனது எச்சரிக்கையை விடுத்தது.

ஆகஸ்ட் 22 பசி பேய் திருவிழாவின் 15 வது நாள் இறந்தவர்களின் துன்பங்களை போக்க தாவோயிஸ்டுகள் மற்றும் புத்த மதத்தினர் சடங்குகளை செய்வார்கள்.

விசாரணையின் போது “எங்கள் விசாரணைகளின் அடிப்படையில், மூன்று நபர்கள் பசி பேய் மாதத்தில், இறந்த நபருக்கு பிரசாதம் அளித்தனர்” என அவர்கள் கூறியதாக என்ஈஏ நிறுவனம் வெள்ளிக்கிழமை இரவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கால்வாயில் ஜாஸ் பேப்பரை வீசுவது என்பது சுற்றுச்சூழல் பொது சுகாதார சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
“முதல் முறை குற்றவாளிகளான மூன்று நபர்களுக்கு எதிராக நாங்கள் உரிய அமலாக்க நடவடிக்கை எடுப்போம்” என்றும் NEA தெரிவித்துள்ளது.

Related posts