அண்மையில் தல அஜித் திரைப்படத் துறையில் கால்பதித்து தனது 30 ஆண்டுகளை நிறைவு செய்தார். இந்நிலையில் வலிமை படத்திற்காக ஐரோப்பாவுக்குப் புறப்பட்ட அஜித் இந்த 30 ஆண்டுகாலம் தனது ரசிகர்கள் தனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அஜித் அவர்களின் PRO சுரேஷ் சந்திரா இந்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளார்.
தல அஜித் வெளியிட்ட அந்த அறிக்கையில் “ரசிகர்கள், விமர்சகர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரு நாணயத்தின் 3 பாகங்கள்; எனது ரசிகர்களின் அன்பையும், விமர்சகர்களின் வெறுப்பையும், நடுநிலையாளர்களின் பார்வையயும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன், வாழு, வாழ விடு. அளவற்ற அன்புடன் – அஜித் குமார்”
1993ம் ஆண்டு வெளியான அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக கால்பதித்தார் அஜித் குமார். வாலி படத்தின் தொடங்கி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், மங்காத்தா, பில்லா, என்னை அறிந்தால் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்து வருகின்றார். H.Vinoth இயக்கத்தில் தற்போது வலிமை என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.