TamilSaaga

காவல் ஆணையர் அலுவலகத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு.. அடுத்து என்ன நடந்தது?

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொள்ளும் இடத்தின் அருகிலேயே திடீரென ஆறடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தரும் நபர்கள் குறித்த வருகை பதிவேடு மற்றும் சோதனை மேற்கொள்ளும் காவலர்கள் அமரும் இடத்தின் அருகில் ஏதோ நெளிவது போன்று இருந்ததை கண்ட காவலர்கள் அருகே சென்று பார்த்தபோது ஆறடி நீளமுள்ள பாம்பு படுத்து இருப்பது தெரியவந்தது

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி வனத்துறையினர் பூத்தின் அருகே பதுங்கி இருந்த பாம்பை பிடித்து பையினுள் அடைத்தனர்.

இது ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு என்றும் விஷமில்லாத பாம்பு என்பதால் பாம்பை பிடிப்பது பையில் போடுவதற்குள் பாம்பை பிடித்த இளைஞரை உடல் முழுவதும் பாம்பு சுற்றிக் கொண்டு மேலே ஏறுவதும் கீழே இறங்குவதும் பாம்பை பிடிக்கும் இளைஞர் சர்வசாதாரணமாக கையில் எடுத்துக்கொண்டு சென்றதும் காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

திடீரென புகுந்த 6 அடி நீளம் உள்ள பாம்பால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது

Related posts