கடந்த 2020ம் ஆண்டு நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கிருமி பரவல் காரணமாக தடைபட்டது. இந்நிலையில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி தொடங்கி ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர் சார்பில் மொத்தம் 16 போட்டிகளில் 23 வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் இரட்டையர் மேசைப் பந்து போட்டியில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது சிங்கப்பூர் அணி. சில தினங்களுக்கு முன் நடந்த முதல் சுற்றுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணி பிரான்ஸ் நாட்டு அணியுடன் மோதியது. தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடிய நமது சிங்கப்பூர் அணி, பிரான்ஸ் நாட்டை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு நுழைந்தது.
இதனையடுத்து இன்று காலிறுதிச்சுற்றில் இன்று சீனாவை எதிர்கொண்ட நமது சிங்கப்பூர் அணி 3-0 என்று புள்ளிகணக்கில் சீனாவிடம் தோல்வியடைந்து பதக்க வாய்ப்பை தவறவிட்டது. மேலும் இந்த போட்டிகளில் சிங்கப்பூர் கடந்த 2008ம் ஆண்டில் வெள்ளியையும் 2012 இல் வெண்கலத்தையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
68 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவும் 68 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.