TamilSaaga

ASEAN கூட்டத்தில் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் – தடுப்பூசி வாங்க ஒப்புதல்

54 வது ஆசியான் எஃப்எம் கூட்டத்தில் கலந்து கொண்டார் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். “எங்கள் மக்களுக்கு தடுப்பூசிகளை வாங்க வேண்டும் என நாங்கள் ஒப்புக்கொண்டோம். நாங்கள் ஆசியான் பயண கட்டமைப்பை ஏற்றுக்கொண்டோம். பொருளாதாரம் பாதுகாப்பாகத் திரும்பவும், நிலைமை சீராகும்போது பாதுகாப்பான வணிகம் மற்றும் அத்தியாவசியப் பயணத்தை மீண்டும் தொடங்கவும் இவை நம்மை அளிக்கும்.” என அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மியான்மர் மக்களுக்கு விரைவாக மனிதாபிமான உதவிகளை வழங்க AHACentre ஐ ஆதரிக்க சிங்கப்பூர் 100,000 அமெரிக்க டாலர்களை பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது 10 லிட்டர் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் 200 யூனிட்களின் பங்களிப்பை விட கூடுதலானாதாகும் என அவர் கூறியுள்ளார்.

24 ஏப்ரல் 2021 அன்று நடந்த ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐந்து-புள்ளி ஒருமித்த கருத்தை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்த வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts