TamilSaaga

சிங்கப்பூரில் புதிய மசோதா.. பாலியல் குற்றத்துக்கு கடும் தண்டனை

சிங்கப்பூரில் புதிய மசோதாவானது 3 வகையிலான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான அதிகபட்ச தண்டனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேற்று (ஆகஸ்ட்.2) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதா, குற்றவியல் சட்டத்தின் பிற மாற்றங்களுக்கிடையில் மூன்று வகையான பாலியல் குற்றங்களுக்கான கடுமையான அதிகபட்ச தண்டனைகளை பரிந்துரை செய்துள்ளது.

முன்மொழியப்பட்ட கடுமையான தண்டனைகள், சிறுமிகள் சம்பந்தப்பட்ட இரண்டு பாலியல் குற்றங்களுக்காகவும், மற்றொரு பாலியல் குற்றங்களுக்காகவும் அதிகபட்சமாக ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பிப்ரவரியில் பாலியல் குற்றங்களுக்கான அபராதம் பரிசீலனைக்குப் பிறகு, சாத்தியமான சில மாற்றங்களை முதலில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே சண்முகம் மார்ச் மாதம் அறிவித்தார் என்பது குறிப்பிட்ச்த்தக்கது.

பாலியல் தொடர்பான குற்றங்களுக்காக பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது பற்றிய கடுமையான விவாதத்தைத் தொடர்ந்து இந்த தண்டனைக்கான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த மசோதா 14 முதல் 16 வயதிற்குட்பட்ட ஒரு மைனர் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அல்லது ஒரு பாலியல் படத்தை பார்க்க வைப்பதற்காகவோ- மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒரு மைனர் முன்னால் செய்யப்படும் இதுபோன்ற பாலியல் செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

இவர்களுக்கான அதிகபட்ச சிறை தண்டனையை ஒன்று முதல் இரண்டு வருடங்களாக உயர்த்துவதை நோக்கமாகக் இந்த மசோதா கொண்டுள்ளது.

Related posts