வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள செய்தியின்படி சிங்கப்பூரில் அடுத்து வரவிருக்கும் ஓரிரு வாரங்களில் வெப்பமான சூழல் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் வெப்பநிலையானது சுமார் 24 டிகிரி செல்சியஸிலிருந்து 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வெப்பநிலையானது 35 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது.
தீவின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் எனவும் சில நாளில் காலை மற்றும் மதிய நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.