2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தால், அமைச்சர் பதவி நிச்சயம் என எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பில்மகேஸ், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் க்ளோஸ் ஃபிரண்டான இவர்களின் நட்பு தலைமுறைகளை தாண்டியது.
மகேஸின் தந்தை அன்பில் பொய்யாமொழி, துரதிர்ஷ்டவசமாக இளம் வயதிலேயே இறந்து போக, அவரது மகனான அன்பில் மகேஸ், ஸ்டாலின் குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாகவே மாறிப்போனார்.
உதயநிதியின் ரசிகர்மன்றத்தைக் கவனித்து வந்த அன்பில் மகேஸுக்கு, 2015 ல் திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. எம்சிஏ பட்டதாரி. மிகவும் துடிப்பான இளைஞரான இவரின் ரத்தத்திலே அரசியல் இருந்தது.
எப்போதுமே சுறுசுறுப்பாகவும் காணப்படும் அமைச்சர் மகேஷ் காலையில் உடற்பயிற்சி செய்வதை கடமையாக கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லை கிரிக்கெட், யோகா, பேஸ்கெட் பால் என எதையும் விட்டு வைப்பதில்லை. முடிந்த வரை உடல் நலத்தை பேணி காப்பது நமது கடமை என்றும் எனர்ஜி டிப்ஸ் தருகிறார்.