TamilSaaga
period days leave

மோசமான கழிப்பிடங்கள்.. அந்த 3 நாட்கள் விடுமுறை கேட்கும் ஆசிரியர்கள்!

உபி அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு, உ.பி.யில் புதிதாக உருவாக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள் சங்கம் ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் ‘பீரியட்ஸ் லீவ்’ கேட்டு மனு அளித்துள்ளனர்.

பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் வலியால் துன்பப்பட்டால் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் விடுமுறை எடுப்பதை உறுதி செய்வது சீனாவின் பல மாகாணங்களில் இப்போது சட்டங்களாகி வருகின்றது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நேரத்தில் விடுமுறை வழங்கப்பட வேண்டுமா என்பது சூடான விவாதங்களை எழுப்பி வருகிறது..

இந்நிலையில், பெண் ஆசிரியர்கள், உத்தரபிரதேச மகிலா ஷிக்ஷக் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் மாநில அமைச்சர்களைச் சந்தித்தனர். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த சங்கம், மாநிலத்தின் 75 மாவட்டங்களில் 50 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ளது.இவர்களின் கோரிக்கை பெண் ஆசிரியர்களுக்கு மாதவிடாய் நாட்களில் 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும்.

“பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் 200 முதல் 400 மாணவர்களுடன் கழிப்பறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.இதனால் நிறைய பெண் ஆசிரியர்கள் சிறுநீர் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.. பெரும்பாலும், பள்ளிகளில் சுகாதாரமற்ற கழிவறைகளை உள்ளனர். பெண்களாகிய எங்களுக்கு இது ஒரு பெரிய கவலை.

மாநிலத்தில் 95.9 சதவிகிதப் பள்ளிகளில் பெண்களுக்கான தனி செயல்பாட்டு கழிப்பறை உள்ளது, இது தேசிய சராசரியான 93.6 சதவீதத்தை விட மிக அதிகம்.” இந்த காரணங்களை கருத்தில் கொண்டு மாதவிடாய் நாட்களில் 3 நாட்களுக்கு பெண் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts