சிங்கப்பூரில் தேசிய தினத்துக்கு மறுநாள் பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டது எந்த மாறுதலும் இல்லாமல் நடைபெறும் என்று MOE தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய தினத்தன்றும் அதன் மறுநாள் ஆகஸ்ட் 10 அன்றும் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா தொற்று மற்றும் உயர் எச்சரிக்கை கட்டுப்பாடுகள் காரணமாக தேசிய தின அணிவகுப்பானது ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
தேசிய தின அணிவகுப்பு மாற்றப்பட்டதால் பள்ளி விடுமுறை நாளும் மாற்றப்படுமா என்பதற்கு பதிலளித்த MOE ஆகஸ்ட் 9 பள்ளிகளுக்கு விடுமுறை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.
அணிவகுப்பு மட்டுமே மாற்றப்பட்ட தேதியில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தேசிய தின பேரணி மாற்றப்பட்ட தேதியில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.