TamilSaaga

உரிய ஆவணம் இல்லாத வெளிநாட்டவர்கள் – மலேசியாவில், இந்தியர் உள்பட 31 பேர் கைது

மலேசிய நாட்டின் Negeri Sembilan என்ற மாநிலத்தில் உள்ள Senawang தொழிற்பேட்டையில் உள்ள கையுறைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தற்போது போலீசாரால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அங்கு முறையான ஆவணங்கள் இன்றி இருந்த 31 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த 31 பேரில் 30 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் மேலும் மீதமுள்ள ஒருவர் அண்டைநாடான இந்தியாவை சேர்ந்து என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மலேசிய குடிவரவு சட்டத்திற்கு புறம்பாக, சட்டவிரோதமாக மலேசியாவில் பல நாட்களாக தங்கியிருந்ததாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தொழிற்சாலையில் நேபால், மியான்மார் என்று 220க்கும் அதிமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது கைதான அனைவரும் Lenggeng குடிவரவுத் தடுப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts