TamilSaaga
OMCL

வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி: தமிழக அரசு மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது ? முழு விவரம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சில தனியார் நிறுவனங்களில் அதிக தொகை செலுத்தி ஏமாற்றம் சந்தித்தவர்கள் தமிழ்நாட்டில் பெருமளவில் உள்ளனர். அதனை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.

OMCL என்பதுதமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு பணிப்புரிய விரும்புபவர்களுக்கு வழிகாட்டுதலாக மட்டும் இல்லாமல் வேலைவாய்ப்பை உண்டாக்கி தரும் நிறுவனமாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) செயல்படுகிறது.

OMCL என்பது 1978 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும், அதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 50 லட்சம். வெளிநாட்டில் வேலை பெற விரும்பும் இந்திய தொழில் வல்லுநர்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் பிறருக்கு பொருத்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறுவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஆட்சேர்ப்பு ஏஜென்சியின் செயல்பாடுகளைச் செய்வதற்கு, குடியேற்றச் சட்டம், 1983 இன் கீழ் தேவைப்படும், இந்திய அரசு, தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சரியான பதிவுச் சான்றிதழையும் கார்ப்பரேஷன் கொண்டுள்ளது. கார்ப்பரேஷன் பின்வரும் அதிகாரிகளை உள்ளடக்கிய இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

அரபு நாடுகள், மத்திய கிழக்கு, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெறுதல் மற்றும் வேலை பெற தரமான ஆதரவை வழங்குவது இந்த நிறுவனத்தின் பிரதான நோக்கம்.

OMCL வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், வேலைக்குச் செல்பவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. விசா பெறுதல், பயண ஏற்பாடுகள், தங்குமிடம் போன்ற உதவிகளை OMCL வழங்குகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இணையதளத்தில், உறுப்பினர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் வேலை வாய்ப்பு அறிவிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும். உறுப்பினர்களாக சேர்ந்து, தகவல்களை சரிபார்த்து, தகுதியான பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பணி விவரங்கள் :

  • வெல்டர் (Welder)
  • பைப்பிங் ஃபேப்ரிகேட்டர் (Piping Fabricator)
  • பைப்பிங் ஃபிட்டர் (Piping Fitter)
  • ஸ்ட்ரக்சர் ஃபேப்ரிகேட்டர் (Structure Fabricator)
  • ஸ்ட்ரக்சர் ஃபிட்டர் (Structure Fitter)
  • மில்ரைட் ஃபிட்டர் (Millwright Fitter)
  • கிரைண்டர் / கேஸ் கட்டர் (Grinder / Gas cutter)
  • பைப்பிங் ஃபோர்மேன் (Piping Foreman)

சம்பள விவரம்:

  • Welder – ரூ. 40,000 to ரூ. 78,000
  • Piping Fabricator ரூ. 40,000 – ரூ. 51,000
  • Piping Fitter ரூ. 36,000 – ரூ.42,000
  • Structure Fabricator ரூ.42,000 – ரூ.51,000
  • Structure Fitter ரூ. 36,000 – ரூ. 42,000
  • Millwright Fitter ரூ.42,000 – ரூ.51,000
  • Grinder / Gas cutter ரூ.30,000 – ரூ.32,000
  • Piping Foreman ரூ. 53,000 – ரூ. 60,000

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ரெஸ்யூமே, பாஸ்போர்ட், ஆதார் மற்றும் புகைப்படத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்: ovemclnm@gmail.com

இப்பணிகளுக்கான நேர்காணல் 31.01.2025 (வெள்ளி) மற்றும் 01.02.2025 (சனி) அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுயவிவரங்கள் (பயோடேட்டா), பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றின் மூல மற்றும் நகல் பிரதிகள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளம்: www.omcmanpower.tn.gov.in, தொலைபேசி எண் 044-22502267 மற்றும் Whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி :
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி சென்னை -32

Related posts