TamilSaaga

சிங்கப்பூரில் ஒரு துறையில் வேலை பார்த்தவர்கள் வேறு துறைக்கு மாற முடியுமா? மாறினால் அதிக பணம் சம்பாதிக்க முடியுமா?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் work permit அல்லது s pass முறையில் ஒரு துறையில் பணியாற்ற வந்து விட்டு, நமக்கு பிடித்த அல்லது நமக்கு திறமை இருக்கும் துறைக்கு மாற முடியுமா என்பது பல காலமாக பலருக்கும் இருக்கும் கேள்வி. அப்படி மாறினால் என்னெனன்ன பலன்கள் கிடைக்கும்? இதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற கேள்விகள், தலைப்புகள், சந்தேகங்கள் இணையத்தில் அதிகமானவர்களால் தேடப்படும் விஷயமாக உள்ளது.

உண்மையில் சிங்கப்பூரில் அப்படி துறை மாறுவதற்கு நிச்சயம் வழி உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு நபர் கட்டுமான துறையில் ஒரு சாதாரண அடிப்படை பணியாளராக சிங்கப்பூருக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். சிங்கப்பூரில் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஏதாவது ஒரு துறையின் பணியாளராக அவர் சிங்கப்பூர் வந்திருக்கலாம்.

ஆனால் இங்கு வந்த பிறகு அவருக்கு உற்பத்தி துறைக்கோ அல்லது ஐடி துறைக்கோ அல்லது தனது விருப்பமான வேறு ஏதாவது துறைக்கோ மாற வேண்டும் என அவர் விரும்பினால் மாற முடியும். எந்த துறையில் பணியாற்ற விசா அல்லது பாஸ் பெற்று சிங்கப்பூருக்கு சென்றாரோ அதே துறையில் அவர் நீடிக்க வேண்டும் என எந்த கட்டாயமும் கிடையாது.

மேலும் படிக்க – Work Permit-ல் இருப்பவர்கள் தனது குடும்பத்தை சிங்கப்பூர் அழைத்து வருவது எப்படி? இதையெல்லாம் ரெடி செய்துவிட்டு ப்ளான் பண்ணுங்க

அப்படி துறை மாற விரும்பும் நபர், உதாரணத்திற்கு கட்டுமான துறையில் இருந்து உற்பத்தி துறைக்கு மாற விரும்பினால், கட்டுமான துறையில் பணியாற்றிக் கொண்டே பகுதி நேரமாக உற்பத்தி துறை சார்ந்த ஏதாவது கோர்சில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம்.

6 மாதமோ அல்லத ஒரு வருடமோ அந்த கோர்சை முடித்த பிறகு அந்த சான்றிதழைக் கொண்டு உற்பத்தி துறைக்கு மாறிக் கொள்ளலாம். அல்லது கட்டுமான துறையிலேயே சாதாரண பிட்டராக வந்து விட்டு, தனக்கு இருக்கும் வேறு ஒரு திறமை மூலம் முன்னேற நினைத்தால் அதற்கான பயிற்சி கோர்சிலும் சேர்ந்து படித்து, அதற்கான பிரிவிற்கு மாறிக் கொள்ளலாம்.

இப்படி செய்வதால் அதிகம் சம்பாதிக்க முடியும். சிங்கப்பூர் சென்ற ஒரு சில ஆண்டுகளிலேயே அதிக சம்பளத்துடன் பணியாற்ற முடியும். இது பணம் சம்பாதிப்பதற்கான வழி மட்டுமல்ல சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்திற்கு உங்களின் மீதான நம்பிக்கை, தரம் ஆகியவற்றையும் அதிகப்படுத்துவதாக அமையும். அதாவது சிங்கப்பூர் வந்த பிறகு நீங்கள் மெனக்கெட்டு, உங்களின் திறமை மற்றும் முயற்சியால் வளர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்ற மதிப்பு ஏற்படும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts