TamilSaaga

கொரோனா பரிசோதனை செய்துகொள்ள.. தானாக முன்வந்த தெலோக் பிளாங்கா ட்ரைவ் சந்தை வியாபாரிகள்

தெலோக் பிளாங்கா ட்ரைவ் சந்தையில் பணியாற்றும் 42 வயது மதிப்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தூய்மை பணிக்காக மூன்று நாட்கள் சந்தை மூடப்பட்டது.

புக்கிட் மேரா தொற்றுபரவல் சந்தைகளில் இதுவும் ஒன்றாக உள்ள நிலையில் சுற்றி வசிக்கும் மக்களுக்கும் பரிசோதனை செய்ய ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

இந்த சூழலில் தெலோக் பிளாங்கா சந்தையில் உள்ள வியாபாரிகள் தானாக முன்வந்து தங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதார அமைச்சு மற்றும் தேசிய சுற்றுப்புற அமைப்புக்கும் தகவல்கள் தரப்பட்டுள்ளதாக மேற்கு கடலோர நகர குழு (West Coast Town Council) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரேய்ச்சல் ஓங் கூறியுள்ளார்.

இதேபோல் ரெட்ஹில்ஸ் சந்தைக்கு நோய்தொற்றுக்கு ஆளான ஒருவர் சென்றதை அடுத்து அங்குள்ள அனைவருக்கும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சூழலில் வருமானம் குறைவாக வந்தாலும் ரெட்ஹில்ஸ் சந்தை உணவங்காடி நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்றால் வருவாய் இழந்து வாடினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை செய்துகொள்ள தெலோக் பிளங்கா கடை வியாபாரிகள் முன்வந்த செயல் பாராட்டுதலுக்கு உரியதாக பார்க்கப்படுகிறது.

Related posts