தமிழ்நாடு மாநிலம் முதன் முதலாக 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொழுது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அதன் பிறகு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையின் காரணமாக தனித்தனியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 38 மாவட்டங்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி புதிதாக மாவட்டங்கள் உருவாகும் பட்சத்தில் கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிசெட்டிபாளையம் ஆகியவை தற்பொழுது உள்ள மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னராக 1966 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தர்மபுரி புது மாவட்டமாக உருவாகியது.1974 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.1979 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் இருந்து பிரிக்கப்பட்டு ஈரோடு மாவட்டம் உருவாகியது.1985 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் உருவாகியது. அதே ஆண்டு மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாகியது.
1986 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவாகியது.2020 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் உருவாகியது. கடைசியாக தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. இதுவரை 38 மாவட்டங்கள் இருந்து வரும் நிலையில் மேலும் 7 மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.