TamilSaaga

“கேப்டனுக்கு கிப்ட் கூட வாங்க தெரியாதாம்”… அவரது மனைவி பொக்கிஷமாய் பாதுகாக்கும் பொருள் என்ன தெரியுமா ? மனைவி பகிர்ந்த சுவாரசியமான தகவல்!

தமிழ் திரைப்பட உலகின் பிரபல முன்னணி நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான திரு விஜயகாந்த் அவர்கள் கடந்த வியாழக்கிழமை காலை இயற்கை எய்தினார். கிட்டத்தட்ட இரண்டே நாட்களில் 15 லட்சம் மக்கள் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது மரணத்தை மறக்க முடியாத வரலாறாக மாற்றினர். விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு பக்க பலமாக இருந்தவர் அவருடைய மனைவி பிரேமலதா.

விஜயகாந்தை பற்றி அவருடைய மனைவி பிரேமலதா விடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருமணமாகி முதல் முதலாக விஜயகாந்த் உங்களுக்கு கொடுத்த கிப்ட் என்ன என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது .இதற்கு பதில் அளித்த பிரேமலதா உண்மையில் சொல்லப்போனால் கேப்டனுக்கு கிப்ட் கொடுக்கவே தெரியாது என்று கூறி சிரிக்கின்றார். திருமணமான இரண்டே மாதத்தில் பிரேமலதாவின் பிறந்த நாள் வந்தது. அப்பொழுது அவருக்கு உதவியாளராக இருந்தவர் உங்களது மனைவிக்கு பிறந்தநாள் கிப்ட் வாங்கி கொடுங்கள் என்று கூறிய பொழுது கிப்ட்டா? என்ன கிப்ட் கொடுக்க வேண்டும் என்று யோசித்து பிறகு வி என்ற சின்னம் பொறிக்கப்பட்ட டாலரை அவருக்கு கிப்டாக கொடுத்துள்ளாராம். இதுவரை எவ்வளவோ நகைகள் வாங்கி கொடுத்தாலும் அந்த டாலரை பாதுகாத்து வருகிறாராம் விஜயகாந்தின் மனைவி.

Related posts