TamilSaaga

ஆசை ஆசையாய் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற சிங்கப்பூர் தம்பதி… கணவனின் கண் முன்னே அரங்கேறிய சம்பவம்!

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்ற சொல்லிற்கு ஏற்றார் போல் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினருக்கு சோக சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கின்றது. அமெரிக்காவிற்கு சுற்றுலாவிற்கு சென்ற சிங்கப்பூர் பயணி ஒருவர் அங்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நியூயார்க் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவிற்கு சென்ற அந்த தம்பதியினர் சுமார் 30 மீட்டர் உயரமுள்ள குன்றில் இருந்து கால் தவறி கீழே விழுந்து உயிருள்ளந்துள்ளார். உயிரிழந்துள்ள நூர் ஆயிஷாவிற்கு 39 வயதாகின்றது. இவர் தனது கணவருடன் சுற்றி பார்ப்பதற்காக பூங்காவிற்கு சென்றார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த அவர் சுமார் மூன்று மணி நேரம் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்துள்ளார் .அவரும் அவரது கணவரும் இணைந்து நோபில் ஸ்கை இன்டர்நேஷனல் எனப்படும் நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் ஆயிஷாவின் உடலை சிங்கப்பூர் கொண்டு வருவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.

Related posts