SINGAPORE: சிங்கப்பூரில் ஒரு வேலையை இழந்து விட்டால் மற்றொரு வேலையை ஏஜென்ட்களின் துணை இல்லாமல் தேடுவது என்பது மிகவும் கடினமாகும். இதனாலையே சிங்கப்பூரில் வேலையை விட்டு விட்டால் திரும்பவும் பணம் கட்டி வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை தற்பொழுது வரை உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் போக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக வேலைவாய்ப்பு பொது சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ‘ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர்’ என்ற அமைப்பு புதிதாக இணையதளத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் சிங்கப்பூரில் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை சிங்கப்பூரில் வேலை தேடுவோர் இந்த இணையதளத்தின் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த அமைப்பு சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வேலை தேடும் நபர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தின் பெயர் மற்றும் எவ்வளவு வேகன்ஸிகள் உள்ளது போன்ற தகவல்களை வேலை தேடுவோர் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் குறிப்பிட்ட வேலைக்கு நிறுவனம் வெளியிடும் தகுதிகள் என்ன என்பதை தெரிந்துகொண்டு அதனை மேம்படுத்திக் கொண்டு குறிப்பிட வேலைக்கு அப்ளை செய்வதற்கான வாய்ப்பையும் இந்த இணையதளம் வழங்குகின்றது.
மேலும் குறிப்பிட்ட வேலைக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவே வேலை தேட விரும்புவோர் தகுதி மற்றும் சம்பளத்திற்கு ஏற்ற வேலையை சிங்கப்பூரில் தேடி கொள்ளலாம்.
இதுவரை 4.9 மில்லியன் தரவுகள் சேகரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த தரவுகள் வேலையின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறைகள் மட்டுமல்லாமல் அரசாங்கத்துறை தொடர்பான வேலைவாய்ப்புகளும் இந்த இணையதளம் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூரில் திடீரென்று செய்யப்படும் ஆட்குறைப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த இணையதளம் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு உதவும் என நம்பப்படுகின்றது.
இங்கே கீழே சிகப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள அந்த வெப்சைட்டின் முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களின் லிங்க்குகளை கிளிக் செய்து வேலை வாய்ப்பு தகவல்களை பெறலாம்.
வெப்சைட் லிங்க் – https://www.skillsfuture.gov.sg/
பேஸ்புக் லிங்க் – https://www.facebook.com/skillsfuturesg/
இன்ஸ்டாகிராம் லிங்க் – https://www.instagram.com/skillsfuturesg/