பொதுவாகவே சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கு இந்தியாவில் உள்ளது போன்றவை உணர்வை அளிக்கும் இடம் என்றால் அது தேக்கா மற்றும் லிட்டில் இந்தியா பகுதிதான். எனவேதான் இந்த பகுதிக்கு லிட்டில் இந்தியா என பெயர் வந்தது. சாதாரண நாட்களிலே அப்படி என்றால் பண்டிகை காலத்தில் சொல்லவா வேண்டும். அதுவும் இந்த வருடத்தில் தீபாவளி பண்டிகையானது வார இறுதியான ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் லிட்டில் இந்தியா வியாபாரிகள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பொதுவாகவே தீபாவளிக்கு முந்தைய நாள் தான் பட்டாசு வாங்க பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுடன் லிட்டில் இந்தியாவிற்கு வருகை தருவர். இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தீபாவளி வியாபாரம் களைகட்டி உள்ளது என அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான பெண்கள் அலங்காரம் செய்வதற்கான பொட்டு பாசிகள், கிளிப்புகள், பேண்டுகள் ஆகியவற்றை ஆர்வத்துடன் வாங்குவதாக பேன்சி கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றுக்கு பின்பு மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடும் தீபாவளி இது என்பதால் இந்த வருட வியாபாரத்தை வியாபாரிகள் மிகவும் எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும் மக்கள் ஆன்லைனில் பொருள் வாங்குவதில் ஆர்வம்காண்பிப்பதன் காரணமாக முன்பு இருந்ததைப் போன்று ஆரவாரம் இப்பொழுது இல்லை என்று சில வியாபாரிகள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். எனினும் இன்று இரவு கூட்டத்தை எதிர்நோக்கி வியாபாரிகள் காத்துக் கொண்டுள்ளனர்.