சிங்கப்பூரின் டான் டோக் செங் மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தங்களது மருத்துவமனையில் “We Are Stronger Together, Beacuse We Have Eachother” என்ற வாசகங்கள் பொருந்திய மின்விளக்கை பொறுத்தியுள்ளனர்.
இந்த மாதம் 22ம் முதல் 26ம் தேதி வரை இந்த வாசகம் மருத்துவமனையில் ஒளிரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. சிங்கப்பூரில் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட #LightforSG இயக்கத்தின் ஒரு பகுதி இது திகழ்கின்றது.
சிங்கப்பூரின் சாங்கி பொது மருத்துவமனையும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இதேபோன்ற ஒளிரும் விளக்குகளில் சுகாதார பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பிரதமர் கடந்த ஜூலை 23ம் தேதி, தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் “ஒரு தேசமாக இந்த தொற்றுநோயைக் கடக்க நாம் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும் என்பதை சக்திவாய்ந்த முறையில் நமக்கு நினைவூட்டுகிறது” என்றார்.