TamilSaaga

சிங்கப்பூரில் இணையம் மூலம் பாலியல் சேவை? – 9 வியட்நாம் நாட்டு பெண்கள் கைது

சிங்கப்பூரில் இணைய வழியில் பாலியில் சேவைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில், போலீசார் வியட்நாம் நாட்டை சேர்ந்த 9 பெண்களை தற்போது கைது செய்துள்ளனர். குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் மூன்று போலீஸ் நிலப் பிரிவுகள் மத்திய சாலைக்கு அருகிலுள்ள இரண்டு காண்டோமினியங்களில் ஒருங்கிணைந்த சோதனைகளை நடத்தியதாக போலீசார் தரப்பில் கடந்த பொலிசார் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

“ஆன்லைன் வழியாக அந்த பெண்கள் பாலியல் சேவைகளை வழங்கியதாகவும், பெண்கள் சாசனத்தின் கீழ் அவர்கள் குற்றத்தைச் செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட 22 முதல் 31 வயதுக்குட்பட்ட பெண்களில், 6 பேர் குறுகிய கால வருகை பாஸ்கள் மூலம் சிங்கப்பூர் வந்துள்ளதாகவும். மேலும் அவர்களது விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மீதமுள்ள மூன்று பேரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 1,00,000 வெள்ளி அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

Related posts