சிங்கப்பூரில் வேலை வாங்க வேண்டும் என்றால் கட்டாயம் ஏஜென்ட் மூலம் தான் வேலைக்கு வர வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனை சாதகமாக்கி கொண்டு பல ஏஜெண்டுகளும் வெளிநாட்டில் வந்து வேலை வாங்க வேண்டும் என்று கனவோடு இருப்போர்களிடம் பணத்தை கறக்கும் செயலை செய்கின்றனர். அதில் சிங்கப்பூர் ஏஜெண்டுகளும் விதிவிலக்கல்ல.
வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு வேலை வாங்கி தர வேண்டும் என்று ஏஜென்ட் பீஸ்க்கு ஆசைப்பட்டு வொர்க் பர்மீட்டில் தப்பான தகவல்களை அளித்து வேலைக்கு சேர்த்த ஏஜென்டிற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 4 வாரங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர் சிங்கப்பூரில் உள்ள முக்கிய கம்பெனியில் ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் ஆவார். சிங்கப்பூர் விதிமுறைகள் படி ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏஜெண்டாக வேலை பார்க்க கூடாது. அதாவது ஒருவர் இருவேலைகளில் ஈடுபடக்கூடாது என்பது விதியாகும்.
இந்நிலையில் கூடுதல் வருமானம் வரும் என்ற ஆசையில் இவர், ஏஜெண்டாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் ஒர்க் பெர்மீட்டில் தப்பான தகவல்களையும் சேர்ப்பதற்கு உதவி புரிந்துள்ளார். சிங்கப்பூர் விதிமுறைகளின் படி அனைத்து வேலை அமைப்புகள் மற்றும் முதலாளிகள் நம்பகத்தன்மையான தகவல்களை மட்டுமே வெளிநாட்டு ஊழியரின் பெர்மிட் கார்டில் சேர்க்க வேண்டும். தவறாக செய்யும் பட்சத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 20 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்று சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, சிங்கப்பூர் அரசு இனி இதுபோல் செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.