செப்டம்பர் 1ஆம் தேதி சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அன்றைய தினத்தை பொது விடுமுறை நாளாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. எனவே எல்லா நிறுவனங்களும் தேர்தல் தினத்தை பொது விடுமுறை நாளாகவே கருதி தொழிலாளர்களுக்கும், பணிபுரியும் ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என சிங்கப்பூரில் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கு வேலை நியமன சட்டத்தின் அடிப்படையில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் எனவும், பொது விடுமுறையின் பொழுது தொழிலாளர்கள் வேலை செய்ய நேரிட்டால் அன்றைய வேலைக்கான சம்பளத்துடன் கூடுதலாக ஒரு நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் அல்லது வேறு ஒரு தினம் விடுப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.