TamilSaaga

சிங்கப்பூரில் KHAANSAEI TECH PTE. LTD. நிறுவனத்தில் “Store Keeper” வேலை.. பள்ளிப்படிப்பு போதும்.. $3,200 – $4,500 வரை சம்பளம்! – கம்பெனி அட்ரெஸ் உள்ளே!

சிங்கப்பூரின் HENDERSON INDUSTRIAL PARK, 203 HENDERSON ROAD 159546 எனும் முகவரியில் உள்ள KHAANSAEI TECH PTE. LTD. நிறுவனத்தில் Store Keeper பணிக்கான காலியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

www.mycareersfuture.gov.sg தளத்தில் இந்த பணிக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Roles & Responsibilities

பொறுப்புகள்:

பொருட்கள் விற்பனையை கணக்கெடுத்து, அதற்கேற்ப பொருட்களை மீண்டும் கொள்முதல் செய்தல்.
கடையில் பணிபுரியும் ஊழியர்களை நிர்வகித்தல் மற்றும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தல்.
புதிய தயாரிப்புகள் அல்லது சிறப்புமிக்க புதிய பொருளுக்கான விளம்பர யுக்திகளை திட்டமிடுதல்.
கடை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பதை உறுதி செய்தல்.
ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதில் தலையிட்டு நிலைமையை சரி செய்தல்.

தேவைகள்:

நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நேரம் தவறாத ஊழியராக இருக்க வேண்டும்.
கடையை சிறப்பாக வழிநடத்த வேண்டும், தொழில் ரீதியாக மேம்பட்ட நபராக இருக்க வேண்டும்.
உயர்நிலைப் பள்ளித் தகுதி அல்லது அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்
சில்லறை வணிகத்தில் முன் அனுபவம் இருக்க வேண்டும். நிர்வாக ரீதியில் உயர் பதவியில் இருந்திருந்தால், இன்னும் சிறப்பு.
நல்ல பேச்சுத்திறன் மற்றும் கம்யூனிகேஷன் திறன் இருக்க வேண்டும்.
MS Office தெரிந்திருக்க வேண்டும்.

Full Time வேலை.

சம்பளம் – மாதம் $3,200 முதல் $4,500 வரை

6 வருடம் அனுபவம் இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்

என்று அந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லிங்கை க்ளிக் செய்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆல் தி பெஸ்ட்!

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts